திருச்சி: குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 45), இவருக்கு மீனா என்ற மனைவியும், இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பாலசுப்பிரமணியன் உள்ளூரில் சரிவர வருமானம் வராததால், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு சம்பாதித்த பணத்தை அவர் மீனாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து குடும்பத்தை நல்லபடியாக மீனா நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கணவருடன் பேசுவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் செல்போன் வாங்கியுள்ளார் மீனா. பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சுரேஷுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆசை ஏற்பட, எனக்கும் பணம் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வை என மீனாவை கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியின்றி கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவழித்து சுரேசை மீனா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு சென்ற பிறகு சுரேஷுடன் ஆரம்பத்தில் பேசிய மீனா அவருடனான தொடர்பை துண்டிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுரேஷ் உனக்கு வேறு யாருடனோ தொடர்பு உள்ளது? அதனால் என்னை வெறுத்து பேசுகிறாயா? எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கோபமடைந்த மீனா, ஒரு கட்டத்தில் தான் கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை வசூலிக்க முடிவெடுத்து சுரேஷின் பெற்றோர் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். ஆனால் சுரேஷ் குடும்பத்தினரோ மீனாவை நடுரோட்டில் வைத்து அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை இதனால் அவமானம் தாங்காத மீனா, வீட்டுக்கு சென்று கடந்த மாதம் 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உடனடியாக வர முடியாத நிலையில், மீனாவின் உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
மீனாவின் தற்கொலை குறித்து விவரம் அறிந்த அவரது உறவினர்கள், கடந்த மாதம் சிறுகனூர் காவல் நிலையத்தில் சுரேஷ் குடும்பத்தின் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய பாலசுப்ரமணியன், மனைவி மீனா பயன்படுத்திய செல்போனை பார்த்துள்ளார். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன. தினமும் இரவு நேரத்தில் வெளிநாட்டில் இருந்த சுரேஷ், மீனாவை மிரட்டி நிர்வாணமாக நின்று வீடியோ கால் பேச கட்டாயப்படுத்தியுள்ளார். அப்படி மிரட்டிய வீடியோவில் இருவரும் நிர்வாண நிலையில் இந்த வீடியோக்கள் மீனா செல்போனில் இருந்தன.
மேலும் மீனா தற்கொலை செய்வதற்கு முன்பு, சுரேஷ் வீட்டிற்கு பணம் வாங்க சென்றபோது நடந்த விவகாரத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு காரணம் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என பேசிய காணொலியும் அதில் இருந்தது.
இந்த வீடியோக்கள் அனைத்தையும் புகாராக எழுதி கடந்த 22ஆம் தேதி பாலசுப்ரமணியன் லால்குடி டிஎஸ்பியிடம் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர், சுரேஷ் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியது, செல்போன் மூலம் ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் மனைவியிடம் கருத்து வேறுபாடு - பூச்சிமருந்து அருந்திய கணவர்