திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் - மேலூர் ரோட்டில் உள்ளது லட்சுமி நாராயணன் நகர். இந்தப் பகுதியை சேர்ந்தவர் சிந்துஜா(30). இவர் இன்று பகலில் தன் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், சிந்துஜாவை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதனால் சிந்துஜா அலறியபடியே மயங்கி விழுந்தார்.
பின்னர், அவர்கள் சிந்துஜா அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளனர். சிந்துஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, சிந்துஜாவை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.