தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வால்பாறை அருகே கஞ்சா விற்ற பெண்ணுக்கு சிறை! - கோயம்புத்தூர்

வால்பாறை அடுத்த காமராஜர் நகரில் கஞ்சா விற்ற பெண் மீது வழக்குப்பதிந்த காவல் துறையினரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வால்பாறையில் பெண் கைது, முத்துலட்சுமி
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

By

Published : Jun 23, 2021, 7:13 AM IST

கோயம்புத்தூர்: வால்பாறை காமராஜர் நகரில் வசித்து வருபவர், முத்துலட்சுமி (43). இவர் அப்பகுதியில் தன்னுடைய மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

தற்போது மழையின் காரணமாக அவருடைய வீடு இடிந்து உள்ளதாகத் தெரிவித்து, காமராஜர் நகர்ப் பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் 3 சென்ட் நிலத்தில் டென்ட் அடித்து தங்கியுள்ளார்.

சிக்கியது கஞ்சா

இதனால், அப்பகுதி மக்கள் கொடுத்தப் புகாரின்பேரில் வருவாய்த்துறை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் நேற்று (ஜூன் 22) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முத்துலட்சுமியின் வீட்டில் கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு மொத்தம், ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா, ரொக்கப்பணமாக ரூ.79 ஆயிரம் ஆகியவை சிக்கியது.

கணவர் வழியில் மனைவி

அங்கிருந்து முத்துலட்சுமியை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு கோவை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருடைய கணவர் கஞ்சா விற்பனையில் பல முறை சிறை சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறையிலிருக்கிறார்.

அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து கஞ்சா பெற்று செல்வதாக, இரண்டாண்டுகளுக்கு முன்பு, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் எரிந்த நிலையில் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details