தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னையில் காதல் மனைவி கொடூர கொலை.. கணவன் கூறிய பகீர் காரணம்? - ஆசிக் இக்பால்

சென்னையில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து வங்கி மேலாளர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் காதல் மனைவி கொடூர கொலை.. கணவன் கூறியது என்ன?
சென்னையில் காதல் மனைவி கொடூர கொலை.. கணவன் கூறியது என்ன?

By

Published : Nov 9, 2022, 6:24 PM IST

சென்னை மண்ணடி பி.வி ஐயர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆசிக் இக்பால்(வயது 45) - பிரியங்கா பத்ரா( வயது 39) ஆகியோர் வசித்து வந்தனர். மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் ஆசிக் இக்பால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா பத்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பிரியங்கா பத்ரா மற்றும் ஆசிப் இருவரும் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒடிசாவில் இருந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர். பிரியங்கா பத்ரா தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆசிப் மற்றும் பிரியங்கா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இன்று காலை வரை நீடித்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த ஆசிப் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பிரியங்காவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டின் உரிமையாளர் கதவை தட்டிய போது கதவை திறந்த ஆசிப்(I killed my wife, call to police) என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆசிக் இக்பாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரை கொலை செய்ததாக ஆசிக் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details