திருப்பூர் மாவட்டம் கூலிப்பாளையத்தில் ஏ.டி.எம் இயந்திரம் திருடப்பட்ட நிகழ்வில், அதன் உடைந்த பாகங்கள் கிடப்பதாக பெருந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது, பெருந்துறை பைபாஸ் ரோடு கருப்பராயன் கோவிலுக்கு அருகில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
பெருந்துறையில் கிடந்தது திருப்பூரில் திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரமா? - ஈரோடு செய்திகள்
ஈரோடு: ஏடிஎம் இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் கிடந்ததால் அது திருப்பூர் மாவட்டத்தில் திருடப்பட்ட இயந்திரமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
atm
இது திருப்பூர் மாவட்டம் கூலிப்பாளையத்தில் திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் மோசடியில் ஈடுபடும் அலுவலர்கள்