தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 18, 2021, 7:30 AM IST

ETV Bharat / crime

லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ!

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் அரசு அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம்
லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மேலாளராக பணிபுரிந்து வருபவர் பாலதண்டாயுதம். இவர் அலுவலக இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒருவரிடம் 500 ரூபாய் நோட்டுக்களை லஞ்சம் வாங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.

ஏற்கெனவே முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலதண்டாயுதம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்றது முதல் கட்ட விசாரணையில் உறுதியானதைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாலதண்டாயுதத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:சுதந்திர இந்தியாவில் தூக்கு மேடைக்கு ஏற காத்திருக்கும் முதல் பெண்!

ABOUT THE AUTHOR

...view details