ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆவடி பாலவேடு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரைக்க கோரி, கிராம நிர்வாக அலுவலர் துர்காதேவியிடம், சதீஷ்குமார் கேட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது! - லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
சென்னை: பட்டாவிற்கு பரிந்துரை செய்ய ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் பட்டாவுக்கு பரிந்துரை செய்ய லஞ்சமாக ரூ.2 ஆயிரம் தரவேண்டுமென கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். இதனையடுத்து, ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்தை சதீஷ்குமார் துர்கேதேவியிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், துர்காதேவியை கையும் களமாக பிடித்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட துர்காதேவி, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கையும் களவுமாக பிடிபட்ட வேளாண்துறை துணை இயக்குநர்: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!