தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை! - ஸ்ரீபெரும்புதூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம்
அழுகிய நிலையில் ஆண் சடலம்

By

Published : Apr 10, 2021, 4:18 AM IST

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் ஆதிகேசவபெருமாள் நகர் கூட்டு சாலை கம்பகால்வாயில், ஆண் ஒருவரின் மிதப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், அழுகிய நிலையில் நீரில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் முழுவதும் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்தவரை அடையாளம் காணுவதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் கையில் கலா என்று பச்சை குத்தி இருப்பதால், அதை வைத்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காப்பீடு தொகைக்காக கணவரை எரித்த கொன்ற மனைவி கைது!

ABOUT THE AUTHOR

...view details