தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சரக்கு வாகனத்தைத் திருடிச் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள் - சிசிடிவி வெளியீடு - சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவு

ஈரோடு: புன்செய் புளியம்பட்டி தனியார் மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

theft
theft

By

Published : Feb 17, 2021, 10:16 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தசாமி. இவரது உறவினர் பவானிசாகர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். கடந்த 31ஆம் தேதிக்கு முன்னர் உறவினரைக் காண சரக்கு வாகனத்தில் கந்தசாமி சென்றார்.

வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரக்கு வாகனத்தைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

அதில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வருகின்றனர். ஒருவர் சாலையின் ஓரத்தில் நின்றுவிட, மற்றொருவர் கீழே இறங்கி சரக்கு வாகனத்தின் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து ஸ்டார்ட் செய்து திருடிக் கொண்டு கிளம்பும் காட்சி பதிவாகியுள்ளது.

சரக்கு வாகனத்தைத் திருடிச் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள்

இதனிடையே, சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றிய புன்செய் புளியம்பட்டி காவல் துறையினர் சரக்கு வாகனத்தைத் திருடிச் சென்ற நபர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கள் இறக்குவோம்; முடிந்தால் தடுத்து பார்க்கட்டும்!

ABOUT THE AUTHOR

...view details