தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

இட ஆக்கிரமிப்பு பிரச்சினை: கிராம மக்கள் சாலை மறியல் - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

உளுந்தூர்பேட்டை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Kallakurichi District Ulundurpet
கிராம மக்கள் சாலை மறியல்

By

Published : Feb 2, 2022, 9:58 AM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. எஞ்சிய 30 சென்ட் இடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோயில், விளையாட்டு மைதானம், பூங்கா, துணை சுகாதார நிலையம் ஆகியவை அமைப்பதற்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டது.

அந்த இடத்தில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்துள்ளனர். இதனை அகற்ற வலியுறுத்தி அந்த கிராம மக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட நலத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அனுப்பிவந்தனர்.

பின்னர் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துவருகிறது.

கிராம மக்கள் சாலை மறியல்

இந்நிலையில், அலுவலர்களின் இந்த அலட்சியப்போக்கை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று (பிப்ரவரி 1) திருக்கோவிலூரிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கிவந்த அரசுப் பேருந்து வழிமறித்து, சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இது பற்றி தகவலறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: Exclusive: தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டிய இலங்கைத் தமிழ் மீனவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details