கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் பாதை, வளையல்காரன் தெரு, நரசிம்மபுரம் ஆகியப் பகுதிகளில் இரவு நேரத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராயல் என்ஃபீல்டு, யமஹா, டியோ ஆகிய இருசக்கர வாகனங்களை அடுத்தடுத்து திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தப் புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றவரைத் தேடி வருகின்றனர்.