தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிசிடிவி இருந்தா என்ன - அலேக்காக பைக்கை திருடும் பலே கொள்ளையர் - cctv footage in kanchipuram

காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலையில் கண்காணிப்பு கேமராவை பொருட்படுத்தாமல், சாதூரியமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

two wheeler theft cctv footage in kanchipuram
two wheeler theft cctv footage in kanchipuram

By

Published : Sep 19, 2021, 1:57 PM IST

காஞ்சிபுரம்:மாவட்டத்தில்முக்கிய சாலையாக விளங்கும் காமராஜர் சாலையில் தாலுகா அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சிவ காஞ்சி காவல் நிலையம், பேருந்து நிலையம், நகைக்கடைகள், துணிக்கடைகள் என மக்கள் அதிகம் நடமாடும் சாலையாக உள்ளது.

இந்நிலையில் பிரபல நகைக்கடை, துணிக்கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் நின்றிருந்து நோட்டமிட்ட இளைஞர் ஒருவர், யாரும் கவனிக்காத நேரத்தில் வாகன நிறுத்துமிடத்திலிருந்து புத்தம் புதியதாக உள்ள இருச்சக்கர வாகனத்தை சாதூர்யமாக திருடிச் சென்றுள்ளார்.

வாகனத்தைச் திருடிச் செல்லும் நபர்

நகைக்கடை மற்றும் துணிக்கடையில் கேமரா கண்காணிப்பு இருந்தும், எவ்வித அச்சமும் இன்றி வாகனத்தை திருடிச்சென்றிருப்பது அப்பகுதியில் வாகனத்தை நிறுத்தும் வாகன ஓட்டிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருச்சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் இளைஞர் குறித்த சிசிடிவி காணொலி

இச்சம்பவம் குறித்து வாகன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு இருச்சக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரசீது இருக்கா - கே.சி.வீரமணியை நெருங்கும் மண் பதுக்கல் வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details