உத்தரப்பிரதேசம்:பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம் கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு மரண தண்டணை வழங்கியுள்ளது. குற்றம் நடந்து 11 மாதங்களில் தண்டணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், அவரது இடது கண்கள் மற்றும் முகம் மற்றும் கால் எலும்புகளை சேதப்படுத்தியதாகவும், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த குற்றத்தை அறிந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். போக்சோ நீதிமன்றம் 10 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, அக்டோபர் 21, 2022அன்று ஹலீம் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவருக்கும் பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் மைனர் பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்தல் ஆகிய வழக்குகளில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
இதில் மூன்றாவது குற்றவாளி மைனர் ஆவார். அதனால் வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் அதேநாளில் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நவாப்கன்ஜ் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.