தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு - போளூரில் கிணறு தூர் வாரும் பணி

திருவண்ணாமலை அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

By

Published : Jul 9, 2021, 6:44 PM IST

திருவண்ணாமலை: போளூர் அருகே உள்ள கீழ்கரிகாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த சில நாட்களாக தனது நிலத்தில் கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த பணியில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று கிணற்றை ஆழப்படுத்த வெடி வைக்கப்பட்டது. அப்போது கிணற்றுக்குள் இருந்த பெலாசூர் கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன், புதுகரிகாத்தூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், மாயகண்ணன் ஆகியோர் மீது எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்தது.

மண்ணில் சிக்கிக்கொண்ட மூவரையும் மீட்கும் பணியில் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர். அப்போது ரவீந்திரன், அர்ஜுனன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த மாயக்கண்ணனை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details