தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நிதிநிறுனம் நடத்தி பலநூறு கோடி ரூபாய் மோசடி : பெண் உள்பட இருவர் கைது! - தஞ்சாவூர் செய்திகள்

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொது மக்கள், வணிகர்களிடம் பலநூறு கோடி வரை மோசடி செய்தவர்களில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண் உள்பட இருவர்  கைது
பெண் உள்பட இருவர் கைது

By

Published : Jul 28, 2021, 11:03 PM IST

தஞ்சாவூர்:ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர். கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகிய இருவரும் கும்பகோணத்தில் நிறுநிறுவனம் நடத்தி பொதுமக்கள், வணிகர்களிடம் பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், சகோதரர்கள் உட்பட 5 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதில், மோசடி சகோதரர்களின் மேலாளர் ஸ்ரீகாந்தன், கணக்காளர் மீரா மற்றும் ஸ்ரீராம் ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சகோதரர்களில் ஒருவரான கணேஷின் மனைவி அகிலா மற்றும் கணக்களார் வெங்கடேஷனை இன்று(ஜூலை 28) காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தன் வாழ்க்கையை சீர்குலைத்த தாய்மாமனை கொலை செய்த நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details