தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 200 கிலோ பாக்கு திருட்டு - 2 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாக்கு தோப்பில் இருந்து 200 கிலோ பாக்குகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 200 கிலோ பாக்கு திருட்டு - 2 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே 200 கிலோ பாக்கு திருட்டு - 2 பேர் கைது

By

Published : Dec 20, 2022, 4:31 PM IST

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர், கோபிநாத் (48). இவர் சேலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக 3 ஏக்கர் விவசாயத் தோட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேலம் மெயின் ரோட்டில் உள்ளது. இதில் 2 ஏக்கர் பரப்பளவில் பாக்கு, தென்னந்தோப்பு உள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இன்ஜினியர் கோபிநாத்தின் தாய் பார்வதி பாக்கு தோப்புக்கு சென்றார். அப்போது பாக்கு மரத்தில் ஏறி சிலர் பாக்குகளை திருடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வதி சத்தம் போட்டார். இதனால் மர்ம நபர்கள் பாக்குகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் கோபிநாத் புகார் அளித்தார். அதில் தனது தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் 200 கிலோ பாக்குகள் திருடப்பட்டதாகக் கூறி இருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பட்டுக்கோணாம்பட்டியை சேர்ந்த மகாராஜன் (47), பசுபதி (33) ஆகியோர் பாக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர். மேலும் பாக்கு திருட்டில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதையும் படிங்க:மதுபோதைக்கு அடிமையானதால் தாய் கண்டிப்பு: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details