திருவண்ணாமலை: திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்தவர்களிடமிருந்து ரூ.72,800 மதிப்புள்ள 520 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வந்தவாசி கோட்டைக் காலனியில் வசித்து வருபவர்கள் வெங்கடேசன், சுந்தர். இருவரும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று (மே.17) காலை வந்தவாசி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் காவலர்கள் இருவரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் மது பாட்டில்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.72,800 மதிப்புள்ள 520 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தற்போது இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உதவியற்ற குழந்தைகளைக் காப்பாற்ற '1098' எண்ணைத் தொடர்பு கொள்ளவும்!