கடலூர்:நாயைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட நபர்களை தொக்காக காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகேயுள்ள அறியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில், "எனக்கு ரொம்ப நாளாக தொல்லை கொடுத்த நாயை தூக்கிலிட்டு சாவடித்து விட்டேன்" என்று இருந்தது. இச்சம்பவம் குறித்து திருவள்ளூரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் விக்னேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதனடிப்படையில் முத்துவேல் மற்றும், நண்பர் ரமேஷ் ஆகியோரை, ஐபிசி 429 பிரிவு 11இன் (விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்) கீழ் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.