திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை - நிம்மியப்பட்டு இடையில் உள்ள விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் தலையில் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று நேற்று (ஜன.17) கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர், பெத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (32) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பளர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து நாகராஜனின் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில், நாகராஜூக்கும், பெத்தூர் பகுதியைச் சேர்ந்த கோகிலா (35) என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.