சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கை மூலம் கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுருந்தார்.
அதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, தோமையர்மலை அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ராஜலஷ்மி, எம்ஜிஆர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (பிப்.23) நெசப்பாக்கம் அருகே காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.