சென்னை கிண்டி பகுதியில் பேருந்து நிலையம் அருகே முதியவர் ஒருவரிடம் உடமைகளை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட இருவரும் தெலுங்கு மொழி பேசியதுடன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
7 செல்போன்கள் திருட்டு
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 7 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.