திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மாதா கோயில் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணியின் மகன் ஆரோக்கியசாமி, சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மார்ச்7) மாலை ஒத்தக்கடை பகுதிக்கு மது வாங்க சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குவாரி (வெங்கச்சங்கல்) ஒப்பந்ததாரர் முத்துக்காளையின் ஆள்கள் அவரை இடைமறித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் ஆரோக்கியசாமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
போட்டுக் கொடுத்ததால் கொலை தாக்குதல்-பாதிக்கப்பட்டவர் பதற்றம் இந்தச் சம்பவம் குறித்து பேசிய ஆரோக்கியசாமி, “கடந்த வாரத்தில் முத்துக்காளையின் வாகனம் ஒன்று கற்களை ஏற்றிச் சென்ற போது, மணப்பாறை வட்டாட்சியரிடம் மாட்டிக்கொண்டது. இந்நிலையில், நான் போட்டுக் கொடுத்ததால் தான் வண்டி மாட்டிக் கொண்டது என எண்ணி முத்துக்காளையின் ஆள்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். நான் தப்பி வந்துவிடேன்.
இதுகுறித்து மணப்பாறை துணைக் கண்காளிப்பாளருக்கு தகவல் அளிப்பேன் என்று கூறிய என் தம்பியிடம், அதுவரைக்கும் நீ உயிரோடு இருந்தால் தானே என்று கூறி முத்துக் காளையின் ஆள்கள் வீட்டிற்குள் இருந்த என் தம்பியையும் சுற்றி வளைத்து வளைத்து கொலை செய்துவிடுவேன் என்கின்றனர். தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மணப்பாறை காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வாகனச் சோதனையில் 1 லட்சம் ரூபாய் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிரடி