சென்னை: போரூர் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் குமரன்(50). இவர் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள உணவகம் வழியே வந்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மீது குமரன் கையை வைத்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண், இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவலர் குமரன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.