தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில், இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கபடுகிறதா என, மாவட்ட, மாநில அளவில் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், சிந்தாதிரிபேட்டை பின்னிரோடு கூவம் பாலம் சுவரில் அதிமுக கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை கண்ட பறக்கும்படை அலுவலர்கள் போஸ்டரை அகற்றி, தேர்தல் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டிய அதிமுக பிரமுகரான சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.