தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

திருப்பூரில் வழிபறி கும்பல் அட்டூழியம் - இளைஞர் கொடூர கொலை - திருப்பூரில் இளைஞர் கொடூர கொலை

திருப்பூர் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் இரவு நேரத்தில் வழிப்பறி கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரில் வழிபறி
திருப்பூரில் வழிபறி

By

Published : Feb 15, 2022, 1:17 PM IST

திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செரங்காடு பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கூச்சலிட்டபடி ஓடி வந்தார். அவரது மார்பு, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்களும் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என தெரியவந்தது.

அவரை மீட்ட காவல்துறையினர் 108 ஆம்புலன்சில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், தனது நண்பரான கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை ஒரு கும்பல் செரங்காடு காட்டுப்பகுதியில் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கிக்கொண்டிருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இளைஞர் கொடூர கொலை

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் காட்டுப்பகுதிக்கு சென்று தேடிய போது அங்கு தலை துண்டித்து எடுக்கப்பட்ட நிலையில் சதீஷ் பிணமாக கிடந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சதீசின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சதீஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் வேறு வேறு நிறுவனங்களில் பணியாற்றிய நிலையில், செரங்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கடந்த 4 நாட்களாக ஒன்றாக வேலைபார்த்து வந்துள்ளனர்.

ரஞ்சித்திடம் விசாரனை செய்ததில் , நேற்று இரவு நடந்து வரும் போது 5 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி செல்போன் உள்ளிட்ட பொருள்களை வழிப்பறி செய்ய முயற்சித்ததாகவும் அப்போது நான் ஓட முயற்சித்ததால் என்னை தாக்கினார்கள் என்றும், சதீஷை அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் இழுத்து சென்றனர் என்றும் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை விசாரணை

வழிப்பறி காரணமாக தான் இந்த கொலையும், கத்திக்குத்தும் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்தா, கொலையில் ஈடுபட்ட அந்த கும்பல் யார் என நல்லூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட இளைஞர் சதீஷ் தலையை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் எம்.எஸ்.நகரில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவர் குடும்பத்தைக் கட்டிப்போட்டு 280 பவுன் நகை கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details