தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

திருப்பூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது! - திருப்பூர் கள்ளச்சாராயம் காச்சியவர் கைது

திருப்பூர்: தாராபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை காவலர்கள் கைது செய்தனர்.

குற்றச் செய்திகள்
திருப்பூரில் கள்ளச்சாராயம் காட்சியவர் கைது

By

Published : Mar 7, 2021, 12:26 PM IST

தாராபுரம் அடுத்த மூலனூர் கும்பம்பாளையம் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தாராபுரம் மதுவிலக்கு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் விநாயகம், துணை ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் (55) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்யப்பட்ட 400 லிட்டர் ஊறல் ஆகியவற்றை காவல் துரையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது சுமோ மோதி விபத்து: ஐடிஐ மாணவர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details