தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கானா பாட்டு பாடி தானா வந்து சிக்கிய திருடன்

வழிப்பறியில் ஈடுபட்டு செயின், பைக் ஆகியவைகளை திருடி விட்டு, கூலாக கஞ்சா போதையில் பட்டாக்கத்தி உடன் ரீல்ஸ் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கானா பாட்டு பாடி தானா சிக்கிய திருடன்; ரீல்ஸால் சிக்கிய சம்வம்
கானா பாட்டு பாடி தானா சிக்கிய திருடன்; ரீல்ஸால் சிக்கிய சம்வம்

By

Published : Sep 29, 2022, 4:15 PM IST

சென்னை:அயனாவரம், ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்ரம் (19). இவர் கடந்த 20ஆம் தேதி தனது நண்பருடன் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கஞ்சா கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் தாக்கி 1 சவரன் நகை, பைக்கை திருடிச் சென்றது. இதில் காயமடைந்த விக்ரம் ,அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த வழிப்பறி சம்பவம் குறித்து ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முந்தினம் இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் 4 பேர் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் கானா பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது. இது குறித்து போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து போலீசார் வீடியோ வெளியிட்ட நபர்களை அடையாளம் கண்டு இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பெரம்பூரை சேர்ந்த இளமாறன்(19), ஆனந்தகுமார் என்கிற மூலை(23) என்பது தெரியவந்தது. மேலும் கைதான இளமாறன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விக்ரம் என்ற இளைஞரை தாக்கி செயின், புல்லட் பைக் ஆகியவைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

கானா பாட்டு பாடி தானா சிக்கிய திருடன்; ரீல்ஸால் சிக்கிய சம்வம்

லோக்கல் ரவுடியான இளமாறன் மீது கொலைமிரட்டல், வழிப்பறி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து புல்லட் பைக், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் பட்டாகத்தி வைத்து ரீல்ஸ் செய்து தெரியாமல் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாகவும், இனி அப்படி போட மாட்டேன் என கைதான இளமாறன் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:விசாரணை கைதி மரணம்...போலீசார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details