தேனி: கோட்டைகளம் பகுதியில் ப்ரோசியன் (PROCYON) என்ற மருந்து நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது. இதன் மேலாளர் ரவிக்குமார் நேற்று பணியை முடித்துவிட்ட வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு வீடு திரும்பினார்.
அதன்பின் ரவிக்குமார் மறுநாள் சென்று பார்த்த போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கபட்டிருப்பதையும், கம்யூட்டர் திருடபட்டிருப்பதையும் அறிந்தார். இதையடுத்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பூட்டை உடைத்து கடையில் கம்ப்யூட்டர் திருட்டு...சிசிடிவி பதிவு மூலம் விசாரணை இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அலுவலகத்தின் அருகில் உள்ள வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் கம்யூட்டரை திருடி விட்டு சகவாசமாக நடந்து சென்று கொண்டிருப்பதை கவனித்தனர். இதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வாகன சோதனையில் சிக்கிய இளைஞர்... பல லட்சம் மதிப்பிளான வாகனங்கள் பறிமுதல்...