தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வசித்துவந்த 5 பேரின் சொத்துக்கள் முடக்கம் - பிரதமரை கொலை செய்ய முயன்றதாக

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக வசித்து வந்து இலங்கையை சேர்ந்த 5 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமரை கொல்ல முயன்றவரின் சொத்துக்கள் தமிழகத்தில் பறிமுதல்
இலங்கை பிரதமரை கொல்ல முயன்றவரின் சொத்துக்கள் தமிழகத்தில் பறிமுதல்

By

Published : Sep 2, 2022, 7:59 AM IST

Updated : Sep 2, 2022, 8:11 AM IST

சென்னை விமான நிலையத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த குணசேகரன் (எ) பிரேம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணைக்கு பின், அவரது மகன் உள்பட 4 பேரை கியூ பிரான்ச் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் போதைப்பொருள் மற்றும் கடத்தல் வழக்குகளில் 2011ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளனர்.

அதன்பின் தங்களுடைய அடையாளங்களை மாற்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ளனர் என்பது அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து க்யூ பிராஞ்ச் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து, இவர்களுக்கு சொந்தமான இடங்களை முடக்கினர். அந்த வகையில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு சொகுசுபங்களா, திருவண்ணாமலையில் உள்ள இரண்டு விவசாய நிலங்கள் என்று மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்கள் அனைத்தும் 2011ஆம் ஆண்டுக்கு பின் வாங்கப்பட்டவை. இதற்கு முறையான வருமான விளக்கங்கள், ஆவணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குணசேகரன் என்பவர் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். இலங்கையின் முன்னாள் பிரதமர் சந்திரிகா குமாரா துங்காவை கொலை செய்ய முயன்ற வழக்கும் அவர் மீது நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:திருமணம் செய்ய பணம்கேட்ட பெண் - கடுப்பாகி திருமணத்தை நிறுத்தியவரின் வீட்டில் சென்று ரகளை

Last Updated : Sep 2, 2022, 8:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details