தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது - சத்தியமங்கலம்

ஈரோட்டில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர், மற்றொரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் என இருவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

By

Published : Nov 26, 2022, 2:32 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம், பவானிசாகர் தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ஈரோடு மாவட்ட குழந்தை நல அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக திருமணம் குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 13 வயது சிறுமியை தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் பாரதி திருமணம் செய்து கொண்டு, தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக பாரதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனர்.

மேலும், தாளவாடியைச் சேர்ந்த இளைஞர் சித்தராஜ், அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு ஆசை வார்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கருவுற்றதால், போக்சோ சட்டத்தில் கீழ் சித்தராஜ் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:மாமனாரை சுட்டு கொன்ற மருமகன்! சொத்து பிரச்சனை காரணமா?

ABOUT THE AUTHOR

...view details