தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது! - பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் இளம் பெண்களை குளிக்கும்போது வீடியோ எடுத்த தனியார் நிறுவன மேற்பார்வையாளரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

supervisor arrest
supervisor arrest

By

Published : Jan 24, 2021, 11:20 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சரளா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ராஜன் (34). இவருக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. ராஜன் வீட்டின் மேல் மாடியில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் குளிக்கும் அறையில் செல்போனில் ஒருவர் படமெடுப்பதை பார்த்து பெண் ஒருவர் கூச்சலிட்டார். அப்போது அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, ராஜன் தனது செல்போனில் படமெடுத்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை கடுமையாக தாக்கினர்.

பின்னர் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்கள் குளிக்கும்போது வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: லஞ்சம் பெற்ற வேலைவாய்ப்பு அலுவலக ஆணையர் கைது!

ABOUT THE AUTHOR

...view details