மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (36). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது உறவினரான ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (பிப். 16) சிவசங்குபட்டி சாலையில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது, கிணற்றில் குதித்த முத்துப்பாண்டி நீரில் மூழ்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஆழமான கிணறு என்பதால் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் இறங்க பயந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.