தர்மபுரி:திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (26). ஜிம் மாஸ்டராக பணிபுரியும் இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மனைவிகளும் நரசிம்மனை பிரிந்து சென்றனர்.
இந்நிலையில் தர்மபுரி மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த 15 வயதுடைய 10ஆம் வகுப்பு படித்த மாணவியிடம் நரசிம்மனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2020ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பெங்களூருவிலிருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி வந்துள்ளார்.
தனிப்படை தேடுதல் வேட்டை..
அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவின்படி தர்மபுரி காவல் துணைக் கண்காணிப்பாளரான வினோத், நகர காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.