தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

அண்ணணை அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பி கைது

சீர்காழி அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

அண்ணணை அரிவாலால் வெட்டி கொலை செய்த தம்பி  கைது
அண்ணணை அரிவாலால் வெட்டி கொலை செய்த தம்பி கைது

By

Published : Apr 8, 2021, 4:57 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சிதம்பரநாதபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மூத்த மகன் கவிபாலன் (24). இவர் ஒரு தினக்கூலி தொழிலாளி. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோர் மற்றும் தம்பி கவிதாசன் ஆகியோரிடம் குடிபோதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு இரவும் கவிபாலன் குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துவிட்டு அருகில் உள்ள வீட்டின் மாடியில் தூங்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவரது தம்பி கவிதாசன் அண்ணன் கவிபாலனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதில், படுகாயமடைந்த கவிபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று கவிபாலன் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த தம்பி கவிதாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது - சார் பதிவாளர் இடமாற்றம் தொடர்பான கருத்தில் நீதிமன்றம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details