கோவை : கருமத்தம்பட்டி வாகராம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் அவர் இரண்டு வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மே மாதம் மளிகை கடைக்கு சென்ற இரு வாலிபர்கள் பொருட்கள் வாங்குவது போல் நடித்து மளிகை கடை உரிமையாளர் சதாசிவத்திடம் 100 மில்லி கிராம் தங்கத்தை காண்பித்துள்ளனர்.
அப்போது தாங்கள் குழி தோண்டும் பணி செய்து வருவதாகவும், புதையலில் ஒரு கிலோ தங்கம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.. அதனை தருவதாகவும், 10 லட்ச ரூபாய் கொடுங்கள் என கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பி சதாசிவம் 10 லட்ச ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அவர்கள் கொடுத்த நகையை பிரித்துப் பார்த்தபோது அலுமினிய குண்டுகளாக இருந்துள்ளது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணை முறையாக நடை பெறவில்லை எனக் கூறி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சதாசிவம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள்.. ஆனால்... - இபிஎஸ் பேச்சு