மயிலாடுதுறை:சீர்காழி அருகே மணல்மேடு ஆத்தூர் கேசிங்கன் பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (36). இவர் வக்கரமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மூன்று நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சீர்காழியில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சண்முகப்பிரியா நேற்று (ஆகஸ்ட் 19) இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் சென்ற இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சண்முகப்பிரியா அணிந்திருந்த ஏழு பவுன் தங்க தாலிசெயினை அறுத்துவிட்டு தப்பிசென்றனர்.