தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வாட்ஸ்அப்பில் ஆபாசம்... தனிமையில் அத்துமீறல்: ஆசிரியரைக் காக்கத் துடிக்கும் அலுவலர்கள்! - Madurai news

மதுரை மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை அலுவலர்கள் காப்பாற்ற முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை காப்பாற்ற நினைக்கும் அலுவலர்கள்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை காப்பாற்ற நினைக்கும் அலுவலர்கள்!

By

Published : Mar 10, 2021, 8:06 PM IST

மதுரையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஊரடங்கு காலத்தின்போது நடைபெற்ற இணையவழிப் படிப்பிற்காகத் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் குறிப்பிட்ட மாணவிக்கு ஆபாச படங்களை ஆசிரியர் அனுப்பியதாகவும் மேலும் மாணவியைத் தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை அலுவலர்கள் காப்பாற்ற முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க...பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து

ABOUT THE AUTHOR

...view details