சென்னை: “திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, இவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கான மின் இணைப்பை துண்டிக்கவும், நியாயமான வாடகையை நிர்ணயிக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அமல்படுத்தாத கோயில் செயல் அலுவலர்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின்படி, நடவடிக்கைகள் எடுக்காமல் ஆக்கிரமிப்பை ஊக்குவித்தது கோயில் நிர்வாகம் தான் எனவும், கோயில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறது. கடமையைச் செய்வதற்கு தான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் இருக்க அல்ல. செயல்படாத இவர்களின் ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது?.