தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சூப்பர் மார்க்கெட் கதவை உடைத்து ஏழு லட்சம் ரூபாய் கொள்ளை - கிரைம் செய்திகள்

ராயபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஷட்டரை உடைத்து ஏழு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பணம் கொள்ளை
money looted

By

Published : May 23, 2021, 3:39 PM IST

சென்னை: ராயபுரத்தில் சூப்பர் மார்க்கெட் ஷட்டரை உடைத்து கல்லாவில் வைத்திருந்த பணம் கொள்ளை போனதால் அதன் உரிமையாளர் அதிர்ச்சிக்குள்ளானார்.

ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் கிரசென்ட் சூப்பர் மார்க்கெட் என்ற கடையை சாகுல் ஹமீது(48) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று(மே.22) அரசின் உத்தரவை அடுத்து இரவு 9 மணி வரை கடையைத் திறந்து வியாபாரம் செய்துள்ளார். அதன்பின் 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் இன்று(மே.23) காலை ஆறரை மணி அளவில் கடைக்கு வந்த போது கடையின் ஷட்டர் திறந்து இருப்பதைப் பார்த்து, சாகுல் ஹமீது அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு, உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் ஏழு லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே, காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து கொள்ளை நடந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காஷ்மீர் கஸ்பாவில் பயங்கரவாதிகளின் மறைவிடம்: ஆயுதங்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details