தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

புத்தகங்களுக்கு பதிலாக பட்டா கத்தியை தூக்கிய மாணவர்கள்...ரயிலில் அட்டகாசம் - பட்டாகத்தி

சென்னை கல்லூரி மாணவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் பட்டா கத்தியை உரசி செல்லும் காணொலி வெளியாகியுள்ளது.

புத்தகங்களுக்கு பதிலாக பட்டாகத்தியை தூக்கிய மாணவர்கள்...ரயிலில் அட்டகாசம்
புத்தகங்களுக்கு பதிலாக பட்டாகத்தியை தூக்கிய மாணவர்கள்...ரயிலில் அட்டகாசம்

By

Published : Sep 22, 2022, 9:56 AM IST

Updated : Sep 22, 2022, 12:41 PM IST

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக ஏறியுள்ளனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். படிகட்டில் தொங்கியபடியே பயணம் செய்த அவர்கள் இந்து கல்லூரி ரயில்நிலையம் வந்த போது பட்டாகத்தியை நடைமேடையில் உரசியும், ரயில் பெட்டியில் பட்டா கத்தியால் தட்டியபடியே கூச்சலிட்டுள்ளனர். அதைப்பார்த்த ரயில் பயணிகள் அச்சத்தோடு பயணம் செய்துள்ளனர்.

புத்தகங்களுக்கு பதிலாக பட்டாகத்தியை தூக்கிய மாணவர்கள்...ரயிலில் அட்டகாசம்

இந்தக் காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில்வே போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அட்டகாசத்தில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:முதலமைச்சர் குறித்து அவதூறு போஸ்டர்...அண்ணாமலை உதவியாளர் கைது...

Last Updated : Sep 22, 2022, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details