தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்கிய மாணவர்கள்: ஒருவர் இறந்தநிலையில் மீட்பு - சென்னை மெரினா கடற்கரை

சென்னை: மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர்கள் மூன்று பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

death
death

By

Published : Feb 11, 2021, 6:32 PM IST

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவபாஜி(18), கோபிசந்த்(18), ஆகாஷ் (18), ராஜசேகர்(18), சிவபிரகாஷ் (18)உள்ளிட்ட 5 பேர் சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்க்கைக்காக வந்துள்ளனர். கல்லூரி சேர்க்கை முடிந்து நண்பர்கள் 5 பேரும் இன்று(பிப்.11) மதியம் மெரினா கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு கடலில் குளித்த சிவபாஜி, ஆகாஷ், கோபிசன் ஆகிய மூவரும் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அப்போது, நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உடனடியாக மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடலில் மூழ்கிய சிவபாஜியின் உடல் எம்ஜிஆர் சமாதி அருகே கரை ஒதுங்கியது. நீரில் மூழ்கிய கோபிசந்த் மற்றும் ஆகாஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவபாஜியின் உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் மூழ்கிய மாணவர்கள்

இதையும் படிங்க:முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details