தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நீட் மோசடி: செயலி மூலம் மதிப்பெண் சான்றிதழை போலியாக தயார் செய்ததாக மாணவி வாக்குமூலம் - mark certificate was forged by the processor

சென்னை: செல்போன் செயலி மூலம் மதிப்பெண் சான்றிதழை போலியாக தயார் செய்ததாக நீட் தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்ட மாணவி தீக்சா வாக்குமூலம் அளித்துள்ளார்.

neetissue
neetissue

By

Published : Jan 20, 2021, 6:38 AM IST

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி நீட் கலந்தாய்வு தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தீக்சா என்ற மாணவி, அவரது தந்தை பாலச்சந்திரனுடன் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்றார். நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற அந்த மாணவி, 610 மதிப்பெண் பெற்ற ரித்திகா என்ற மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மருத்துவக்
கலந்தாய்வில் பங்கேற்றார்.

அவர் சமர்ப்பித்த சான்றிதழ் போலி என்று தெரியவந்ததும் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாணவி தீக்சா, அவரது தந்தை மீது 419இன் கீழ் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 420-மோசடி, 464-தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465-பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல், 468-ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல், 471-பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என கூறி பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், ஜனவரி 1ஆம் தேதி பாலச்சந்திரனை தனிப்படையினர் கைது செய்தனர்.

ஆனால், மாணவி தலைமறைவாக இருந்து வந்தார். இதனிடையே, பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர், நேற்று அவரை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட மாணவி தீக்சாவிடம் பெரியமேடு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட பின்னர், எழும்பூர் பெருநகர குற்றவியல் 2ஆவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதிப்பெண் சான்றிதழை மாற்றுவது குறித்து நண்பர்களிடம் கற்று கொண்டு, செல்போனில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து, மதிப்பெண்ணை மாற்றியதாக வாக்குமூலம் அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details