தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தல்... ரயில்வே  ஊழியர்கள் உடந்தை...

வட மாநிலங்களிலிருந்து ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து ரயில்களில் தடையின்றி வரும் கஞ்சா; குருவிகள் கைது
வட மாநிலங்களில் இருந்து ரயில்களில் தடையின்றி வரும் கஞ்சா; குருவிகள் கைது

By

Published : Sep 1, 2022, 8:21 AM IST

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மவுண்ட் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜூவல் ஹுசைன்(26), ஜுயல் இஸ்லாம் (26) என்பதும், இவர்களிடம் அகர்தலா TO பெங்களூரு ரயிலில் கேண்டின் ஊழியராக பணிபுரியும் பிண்டு (35) என்பவர் கஞ்சாவை கொடுத்து அவர் கூறும் நபரிடம் கொடுக்க சொல்லியிருப்பதும் தெரியவந்தது.

இந்த பார்சலை கொடுக்க 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை பேரம் பேசப்பட்டுள்ளது. இருவரும் குருவிகள் போல செயல்பட்டுள்ளனர். இதேபோல பல குருவிகள் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம் மாநிலங்களில் இருந்து கஞ்சா பார்சல் சர்வீஸ், லாரிகள், ரயில்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு கடத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ரயில்களில் கடத்தப்படும் கஞ்சா, மருந்து பொருட்கள் அல்லது வேறு பொருட்கள் போன்று அதிநவீன பேக்கிங் செய்யப்பட்ட தமிழ்நாட்டிற்குள் வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில், "2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ரயில் மூலமாக கொண்டு வரப்படும் கஞ்சா பார்சல் பெரம்பூர் ரயில் நிலையம் அடைவதற்கு சிறிது தூரம் முன்பு, கஞ்சாவை கொண்டு வரும் நபர்கள் வெளியே தூக்கி வீசுவார்கள், இதனை அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் குருவிகள் பெற்று செல்வார்கள். ஆனால் 2010ஆம் ஆண்டுக்கு பின் இதை அறிந்த உள்ளூர் ரவுடிகள் கஞ்சாவை பறித்து செல்வதால் இந்த முறையை கஞ்சா வியாபாரிகள் கைவிட்டனர். அதற்கு மாறாக தற்போது ரயில் ஊழியர்கள் மூலமாக கஞ்சா கொடுத்து கைமாற்றிவருகின்றனர்.

வட மாநிலங்களில் ஒரு கிலோ கஞ்சா 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, அந்த கஞ்சா தமிழ்நாட்டில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல கடந்த மாதம் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு பின்புறம் 4 வடமாநில நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் 50 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக காவலர் கொலை

ABOUT THE AUTHOR

...view details