ராமநாதபுரம்: காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக சமையல் மஞ்சள் மூடைகளை ஏற்றிச் சென்ற ஒரு மினி லாரி நிறுத்தி சோதனை செய்தனர்.
இலங்கைக்கு கடத்த இருந்த 1700 கிலோ மஞ்சள் பறிமுதல்!
இலங்கைக்கு கடத்துவதற்காக மினி லாரியில் கொண்டு வரப்பட்ட 1700 கிலோ மஞ்சளை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Cooking Turmeric seize
அப்போது, அந்த லாரியில் 58 மூடைகளில் தலா 25 கிலோ வீதம் 1,700 கிலோ சமையல் மஞ்சள் இருந்ததை கண்டுபிடித்தனர். வியாபாரி அல்லாத ஒருவருக்கு இந்த மஞ்சள் கொண்டு செல்லப்படுவதை அறிந்து உடனடியாக லாரியுடன் மஞ்சளை பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள், 7000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட மஞ்சளாக இருக்கலாம் என்பதால், லாரியில் இருந்த இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.