சென்னை: ரயில் பயணிகளிடம் ஸ்மார்ட் போன்களைத் திருடிவரை தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர், தாம்பரம் இருப்பு பாதை காவல்நிலையத்தில், தான் பயணச்சீட்டு வாங்கும் போது தனது செல்போன் திருடப்பட்டதாக புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த இருப்பு பாதை காவல்நிலையக் காவல்துறையினர், மத்திய ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குப்புசாமியின் பையில் இருந்து செல்போனைத் திருடுவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த கேமிரா காட்சிகளின் அடிப்படையில், ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொமோண்டோ குமார்(20) என்பவரை தாம்பரம் இருப்புப் பாதை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அமைந்தக்கரையில் தங்கி இருக்கும் கொமோண்டோ குமார், ரயில் பயணிகளிடம் ஸ்மார்ட் போன்களை மட்டும் குறிவைத்து திருடிவந்ததை அவர் ஒத்துக்கொண்டார். அவரிடமிருந்து, ரூ.5 லட்சம் மதிப்புள்ள 26 ஸ்மார்ட் போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், திருடப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் திருப்பி அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்துத் தகராறு - அண்ணனை காரில் கடத்திய தங்கை கைது