தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - 19 பேர் காயம்! - தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

sivakasi crackers factory accident casualties lists, sivakasi pattasu aalai vibathu, சிவகாசி பட்டாசு ஆலை விபத்து, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு, 19 பேர் காயம், காளையார் குறிச்சி தங்கராஜ் பாண்டியன், தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலை, thangaraj pandiyan crackers factory
பட்டாசு ஆலை வெடி விபத்து

By

Published : Feb 25, 2021, 10:41 PM IST

Updated : Feb 25, 2021, 11:00 PM IST

விருதுநகர்: சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலையில் இன்று (பிப்.25) மாலையில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 19 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காளையார்குறிச்சியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதற்கட்டமாக நீர்த்துப்போன மருந்தை உபயோகப்படுத்தியதால் தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டி

இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் தங்கராஜ், எம் புதுப்பட்டி காவல்நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பட்டாசு ஆலை பராமரிப்பு ஆய்வுக்குழு, விரைவில் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களின் விவரங்கள் கீழ்வருமாறு:

  1. முத்துக்குமார்-30 | த/பெ சுந்தரமூர்த்தி
  2. மாரியப்பன்-60 | த/பெ மாயூரன்
  3. முத்துச்செல்வி-43 | க/பெ பாண்டி
  4. அய்யாசாமி 51 | த/பெ வேல்சாமி
  5. முத்துராஜ்-34 | த/பெ ராமமூர்த்தி
  6. தங்கவேல்ம்மாள் -60 | க/பெ சின்ன வீராச்சாமி
  7. அங்காள ஈஸ்வரி-40 | க/பெ ராமர்
  8. சுதா -35 | க/பெ மாரிமுத்து
  9. பால சரவணன்-24 | த/பெ சரவணன்
  10. பூபதி - 30 | க/பெ ராஜேந்திரன்
  11. பிரபாகரன்-32 | த/பெ ராஜ்
  12. கூடலிங்கம்-29 | த/பெ பாண்டி
  13. கனகராஜ்-19 | த/பெ சஞ்சீவி ராஜ்
  14. அந்தோணி ராஜ்-50 | த/பெ பிச்சைமுத்து
  15. பொன்னுச்சாமி-75 | த/பெ தில்லை செட்டியார்
  16. ரியாஸ்கான்-37 | த/பெ சந்தன கான்
  17. ரமேஷ்
  18. முத்தம்மாள்
  19. கருப்பாயி
Last Updated : Feb 25, 2021, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details