பெங்களூரு: பாலியல் புகார் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
கர்நாடகாவில் பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறார். இந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜர்கிஹோலி. இவர் தொடர்பாக பாலியல் காணொலி பதிவுக் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
முதலில் இந்தக் காணொலிக் காட்சி பதிவுகளில் இருப்பது தாம் அல்ல என்று மறுப்பு தெரிவித்தார். மேலும் இதை நிரூபித்தால் அமைச்சர் பதவியை அல்ல, அரசியலை விட்டே வெளியேறுவேன் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசினார்.
அடுத்த சில மணி நேரங்களில் முதலமைச்சரவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி பொட்டிப் பாம்பாக அடங்கினார். இந்நிலையில் இவரின் ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.