தூத்துக்குடி:அண்ணா நகர் 6-ஆவது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள் அதே பகுதியில் வசித்து வரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் என்பவர் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார். இந்த வீட்டை விலைக்கு வாங்கியது தொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் அண்ணாநகர் 6-ஆவது தெருவில் வைத்து ராம்குமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த தங்கை மாரியம்மாளையும் இருவரும் சேர்ந்து வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.