சென்னை: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
எஸ்.பி பாலியல் தொல்லை வழக்கு: விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும்! - சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
11:44 March 23
இது தொடர்பாக சிபிசிஐடி உயர் நீதிமன்றத்தில், “இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், கைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி பதிவுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும், “இன்னும் 8 வாரங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும்” என்றும் சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிபிசிஐடி சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.