தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது! - வியாபாரி கைது

பான்மசாலா கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

one person arrest
one person arrest

By

Published : Jul 25, 2021, 12:38 PM IST

ஈரோடு: தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்ததை அடுத்து, மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சியில் உள்ள டவுன் காவல் நிலைய காவலர்கள் நேற்று (ஜூலை .24) மாதவ கிருஷ்ணா வீதியில் செயல்படும் மன்மோகன் கடையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் கடை முதலாளி சீதாராம் ராய், 3,400 துளசி பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து டவுன் காவல் நிலைய காவலர்கள் பான்மசாலா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த சீதாராம் ராய் என்பவரைக் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சர்வன்ராஜ் என்பவரை காவல் துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோஷ்டி மோதல்: எட்டு ஆண்டுகள் குவைத்தில் தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details